தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயானத்துக்குச் செல்ல சாலை இல்லை? - விளைநிலங்கள் வழியாக உடலை சுமந்த உறவினர்கள்! - திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர்: நன்னிலம் அருகே மயானத்துக்குச் செல்ல சாலை வசதியில்லாததால் உடலை சுமந்தபடி விளைநிலங்களில் இறங்கிச் செல்லும் அவலநிலை உள்ளதால் சாலை வசதி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மயானத்துக்குச் செல்ல சாலை இல்லை

By

Published : Oct 19, 2019, 8:22 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கமுகக்குடி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டு பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, அரசு சார்பில் அப்பகுதி மக்களின் கோரிக்கையான மயான கொட்டகை அமைத்துத் தரப்பட்டது. மயான கொட்டகை அமைத்துத் தந்தவர்கள், அங்கு செல்வதற்கான சாலை வசதி செய்து தரவில்லை.

மழைக்காலங்களிலும் இயற்கை பேரிடர் காலங்களிலும் மயான கொட்டகைக்குச் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மயான பூமிக்குச் செல்லப் பாதை இல்லாததால், இறந்தவர்களின் உடல்களைத் தூக்கிக் கொண்டு, வயலின் வரப்புகளில் செல்லும் போது சடலத்தைச் சுமந்து செல்வர்களும், சடலத்துடன் கீழே விழும் அவதி நிலையினை சந்தித்து வருகின்றனர்.

விளைநிலங்கள் வழியாக பிணத்தை சுமந்த உறவினர்கள்

இக்காரணங்களால் சில சூழ்நிலைகளில் இறப்பவர்களின் உடல்களை வாய்க்கால் ஓர வரப்பிலேயே புதைக்கும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும், அப்பகுதி மக்கள் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், எந்த ஒரு நடவடிக்கையும் அரசு அலுவலர்கள் எடுக்கவில்லை என்று புலம்பி வருகின்றனர். எனவே, இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

தடை அதை உடை., சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்: ஒரு தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details