தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு - எஸ்.பி.க்கு குவியும் பாராட்டு! - தனிப்படை

திருவாரூர்: காணாமல் போன 17 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்களை கண்டுபிடித்து ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Cell phones worth Rs 17 lakh recovered
Cell phones worth Rs 17 lakh recovered

By

Published : Jan 23, 2021, 10:08 AM IST

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் காணாமல் போனது, திருடு போனது தொடர்பாக 2020-2021ஆம் ஆன்டில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அனைத்து செல்போன்களையும் விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையின் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ராஜா என்பவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

செல்போன்கள் தொடர்பான புகார் மனு, காவல் நிலையங்கள் வாரியாக சேகரித்து அதன் மூலம் விசாரணை செய்து தனிப்படை நடத்திய அதிரடி சோதனையில், களவுபோன மற்றும் காணாமல் போன 17 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்களை மீட்டுகப்பட்டது.

இதையடுத்து, அனைத்து செல்போன்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, சம்பந்தப்பட்ட செல்போன் உரிமையாளரிடம் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து செல்போன்களை ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: சாலையில் தவற விட்ட பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

ABOUT THE AUTHOR

...view details