தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் மண்டல அதிகாரி குழுவில் விவசாய பிரதிநிதிகளை கூடுதலாக கேட்டு ஆர்ப்பாட்டம் - Thiruvarur Agricultural Zone

திருவாரூர்: வேளாண் மண்டல அதிகாரி குழுவில் விவசாய பிரதிநிதிகளை கூடுதலாக இணைக்க வலியுறுத்தி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 4, 2020, 10:20 PM IST

Updated : Mar 4, 2020, 10:53 PM IST

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு விவசாயிகள் பெரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் காவிரிப் படுகை டெல்டா மாவட்டங்களில் விடுபட்ட அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வேண்டும் என திருவாரூரில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சுப்ரமணியம் கூறும்போது, "டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்ததை வரவேற்கிறோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை நீக்க வேண்டும். வேளாண் மண்டல அதிகாரி குழுவில் விவசாய பிரதிநிதிகளை கூடுதலாக இணைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில்கள் கூடுதலாகி வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: விவசாயிகள் சங்கம் சார்பில் மார்ச் 7ஆம் தேதி முதலமைச்சருக்கு பாராட்டு விழா

Last Updated : Mar 4, 2020, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details