திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிக்கு வந்த காவிரி நீரை அமைச்சர் காமராஜ் மலர் தூவி வரவேற்றார். பின்பு ஜாம்புவானோடை பாசனப் பகுதிக்கு விவசாயத்திற்காக மதகு அணையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக முதலமைச்சரால் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 16ஆம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நான்கு நாள்களில் கடைமடை பகுதியான திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடைந்து விட்டது.