திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. நெல் ஜெயராமன் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை, சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
காவிரி விவசாயிகள் சங்கத்தின் 2ஆவது மாநில மாநாடு - தொடங்கி வைத்த அமைச்சர் காமராஜர் - Minister Kamarajar
திருவாரூர்: மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது, அதனை உணவுத்துறை அமைச்சர் காமராஜர் தொடங்கிவைத்தார்.
minister-kamarajar
இந்த மாநாட்டில், விவசாயம் சார்ந்த வேளாண் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. குறிப்பாக அதில், சொட்டு நீர் பாசனம், பாசன கருவி, அறுவடை இயந்திரம், குபேட்டா உள்ளிட்டவைகள் அடங்கும். மேலும் இதில், சிட்டி யூனியன் வங்கியின் தலைவர் காமகோடி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:கருத்து கேட்புக் கூட்டத்தில் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்