திருவாரூர் :தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மன்னார்குடியில் இன்று (அக்.19) பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலன்களுக்கு எதிரானது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான இச்சட்டத்தால் இந்தியாவில் வாழக்கூடிய 80 விழுக்காடு சிறு,குறு விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறக் கூடிய அவலநிலை ஏற்படும்.
இச்சட்டத்தில் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதிலிருந்து அரசு தன்னை விலக்கிக் கொண்டு, உலக கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்திய விவசாயிகளை அடகு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய உணவுக்கழகம் இனி கொள்முதல் செய்ய இயலாத நிலையை உருவாக்கிவிட்டது. மேலும் இதனால் வருகிற 2021 பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்முதலுக்கான நிதி முற்றிலும் கைவிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.