தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CAA Protest: அமித் ஷா உருவ பொம்மை எரிப்பு! ஒன்று திரண்ட மத்திய பல்கலைக்கழக மாணவர்கள்!

திருவாரூர்: டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் மோடி, அமித்ஷா உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Citizenship Amendment Act, caa protest in tiruvarur, caa potest in tiruvarur central university, குடியுரிமை திருத்தச் சட்டம், tiruvarur caa protest, caa protest, திருப்பூர் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்
caa potest in tiruvarur central university

By

Published : Dec 17, 2019, 3:06 PM IST

மத்திய அரசு டிசம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைக்க முற்பட்டனர். இவ்வேளையில் டெல்லி மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாணவர்கள்

'பெரும்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?' - கோபப்பட்ட பிரணாப் முகர்ஜி

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மோடி, அமித்ஷா ஆகியோரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தாண்டியும் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

மத்திய பல்கலைக்கழக மாணவர்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற ஏஜிபி கட்சி: பாஜக- ஏஜிபி நட்பு முறிவு?

டிசம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அன்றிலிருந்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து, பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

CAA Protest மோடி, அமித் ஷா உருவ பொம்மையை எரித்துப் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details