தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2020, 8:04 PM IST

Updated : Mar 16, 2020, 8:14 PM IST

ETV Bharat / state

சிஏஏ எதிர்ப்பு: வங்கி கணக்கில் பணத்தை எடுத்து நூதன போராட்டம்!

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள முழு பணத்தையும் எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

வங்கி கணக்கில் பணம் எடுக்கச் சென்ற இஸ்லாமியர்கள்
வங்கி கணக்கில் பணம் எடுக்கச் சென்ற இஸ்லாமியர்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு சட்டப்பேரையில் தீர்மானம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்யக்கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பல்வேறு போராட்டங்களை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்திவருகின்றனர்.

அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 11 வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இஸ்லாமியர்கள், தங்களது வங்கிக் கணக்கில் உள்ள முழுப்பணத்தையும் எடுத்து, அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் நூதன போராட்டம் இன்று நடைபெற்றது.

இதில், அடியக்கமங்கலம் கிராமத்தில் இஸ்லாமியர்கள் இன்று தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக ஊர்வலமாகச் சென்று, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுக்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து பணத்தைக் கேட்டுள்ளனர்.

சிஏஏவுக்கு எதிராக வங்கி கணக்கில் குழுவாக பணம் எடுக்கச் சென்ற இஸ்லாமியர்கள்.

அதற்கு வங்கி ஊழியர்கள் இன்று காலை வங்கிப் பரிவர்த்தனைக்காக எடுத்து வந்த 25 லட்சம் தீர்ந்து விட்டதால் மாலை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருப்பி அனுப்பிவைத்தனர். அதனைத் தொடர்ந்து, அடியக்கமங்கலத்தில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுக்க இஸ்லாமியர்கள் முற்பட்டதால், அவர்களை வங்கி அலுவலர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் பின்ணனி என்ன?

Last Updated : Mar 16, 2020, 8:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details