மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தலைநகரான டெல்லி கலவரம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இச்சட்டம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. ஆனால், இந்திய பிரதமர் மோடி குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லையென்று தெரிவித்துவருகிறார்.