தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு: மீன் வியாபாரி மீது பாய்ந்தது போக்சோ! - தமிழ் குற்றசெய்திகள்

திருவாரூர்: புதுப்பத்தூர் பகுதியில் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக மீன் வியாபாரி போச்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

bocso-law-on-fish-trader-who-molested-girlbocso-law-on-fish-trader-who-molested-girl
bocso-law-on-fish-trader-who-molested-girl

By

Published : May 27, 2020, 4:13 PM IST

திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். மீன் வியாபாரியானஇவர், தனது அண்ணன் கணேசன் வீட்டிற்குச் செல்வதற்காக வடபாதிமங்கலம் பகுதிக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர், அப்பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியை அங்கு பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வடபாதிமங்கலம், காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரைப்பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அன்பழகனை கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அன்பழகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன்!

ABOUT THE AUTHOR

...view details