தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் - பள்ளிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: கோட்டூர் அருகே காரியமங்கலம் கிராமத்தில் கோயில் அருகே அரசு பள்ளி கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 1, 2020, 10:12 PM IST

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலம் கிராமத்தில் பழமையாக அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்திற்கு எதிரே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளி கட்டடம் ஒன்று கட்டடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலில் பள்ளி கட்டிடம் சேதமடைந்தது.

இந்நிலையில் பள்ளிக்கு அருகே கோவில் வளாகத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இங்குள்ள பழமையான அகத்திஸ்வரர் ஆலயத்தை ஆகம முறைப்படி புதிப்பித்து கட்டவேண்டும் என்றும் எனவே பள்ளி கட்டிடம் இப்பகுதியில் அமைந்தால் ஆலயம் கட்டுவதில் சிரமம் ஏற்படும் என கோரி பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது சமாதான பேச்சுவார்த்தை நடத்த வந்த காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது இதுகுறித்து நாளை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்தது பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details