தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்’

திருவாரூர்: தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

By

Published : Jan 20, 2020, 6:38 PM IST

’ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்’
’ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்’

டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய திட்டங்கள் அனுமதிக்கப்பட்டால் திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகள் இத்தகைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் இந்த சூழலில், மத்திய அரசு டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என்றும், அந்தப் பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

’ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்’

இந்த அறிவிப்புக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக அதனை திரும்பப் பெற வேண்டும் என்றும், மீறி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் எனவும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details