தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை மசோதா எதிர்ப்பு: பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - Thiruvarur College students protest the Citizenship Law

திருவாரூர்: பாரதிதாசன் மாதிரி கல்லூரியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி மாணவர்களைத் தாக்கிய காவல் துறையைக் கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

bharathidasan-college-students-protest-citizenship-law
bharathidasan-college-students-protest-citizenship-law

By

Published : Dec 18, 2019, 3:19 AM IST

மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல் துறையினர் மாணவர்களைப் போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறித்தினர்.

ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது காவல் துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தினர். இதனைக் கண்டித்து டெல்லி காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறித்தி தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலச்சேரி பாரதிதாசன் மாதிரி கல்லூரியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், உடனடியாக சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம்...!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details