திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகளைக் குறிப்பிட்டு முறையிட்டனர்.
மன்னார்குடி ஒன்றியம் 4ஆவது வார்டு உறுப்பினர் குமரேசன் பேசுகையில், தங்கள் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தரவேண்டும் என்றும், கடந்த மூன்றரை ஆண்டுகளாக எந்தவித அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற முடியாமல் நிதிப் பற்றாக்குறையால் பஞ்சாயத்துகள் முடங்கியுள்ளது. எனவே பெரிய பஞ்சாயத்துகளுக்கு ஒரு லட்சமும், சிறிய பஞ்சாயத்துகளுக்கு ரூபாய் 50 ஆயிரம் பொதுநிதியிலிருந்து உடனடியாக வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களும் அவரவர் தத்தமது பகுதிகளில் நிலவும் பிரச்னைகளையும், தேவைகளையும் எடுத்து கூறி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.