தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது அணை விவகாரம் - கேரள மாநில ஆதரவை கோர பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை - etv bharat

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கேரள மாநில ஆதரவை கோர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம்
மேகதாது அணை விவகாரம்

By

Published : Jul 22, 2021, 8:11 PM IST

திருவாரூர்: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மேகதாது அணை விவகாரம்

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வகையில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானப் பணிக்கு ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு அதனை அனுப்பியுள்ளது.

மேகதாது அணை விவகாரம்

சட்டப்பேரவையில் தீர்மானம்

ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த திட்ட அறிக்கையை சட்டவிரோதம் என அறிவித்து நிராகரித்திட வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

மேலும் மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த கேரள மாநில ஆதரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: அமைச்சர் வீட்டில் சோதனை - ஆவணங்கள் சிக்கவில்லை என வழக்கறிஞர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details