திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரக விவசாயப் பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த முக்கியத்துவத்தை அடுத்த இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாக பள்ளி மாணவர்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நெல் குறித்து விழிப்புணர்வு
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாரம்பரிய நெல் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நெல் குறித்த விழிப்புணர்வு, paddy cultivation
அந்த வகையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாப்பிள்ளை சம்பா, யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மேலும் இதில் கலந்துகொண்ட மாணவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களை காப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: போகி: புகை மூட்டத்துடன் காணப்படும் சென்னை!