திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகளில் குறுவை சாகுபடிக்காக கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், பொதுமக்கள் யாரும் ஆறுகளில் குளிப்பதைத் தவிர்க்கவேண்டும்.
எனவே, குழந்தைகளைக் கண்டிப்பாக ஆறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் குளிப்பதை பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.
பொதுமக்கள் ஆறுகளில் குளிப்பதைத் தவிர்க்கவும்: திருவாரூர் ஆட்சியர் வேண்டுகோள்! - Thiruvarur District News
திருவாரூர்: பொது மக்கள் மற்றும் குழந்தைகள் ஆறுகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
ஆட்சியர் ஆனந்த்
மேலும் கால்நடைகளை ஆற்றின் கரைகளில் மேய்ச்சலுக்கு விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்' என்றும் அவ்வறிக்கை மூலம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:’தேவையற்ற விழாக்களை தவிர்த்து விடுங்கள்’ - நீலகிரி ஆட்சியர் கோரிக்கை