தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் துணை ராணுவப் படை, காவல் துறை கொடி அணிவகுப்பு பேரணி

திருவாரூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் துணை ராணுவப் படை மற்றும் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

துணை ராணுவப் படை, காவல்துறை, திருவாரூர், திருவாரூர் தேர்தல் அலுவலர் சாந்தா, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, திருவாரூரில் துணை ராணுவப் படை காவல்துறை கொடி அணிவகுப்பு பேரணி, Auxiliary Army and Police flag parade in Thiruvarur, Auxiliary Army, Tamilnadu police, thiruvarur election officer Saantha, Thiruvarur DSP Kayalvizhi
auxiliary-army-and-police-flag-parade-in-thiruvarur

By

Published : Mar 22, 2021, 12:22 PM IST

வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மத்திய பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

துணை ராணுவப் படை, காவல்துறை கொடி அணிவகுப்பு பேரணி

இதில் திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக மத்திய துணை ராணுவப் படையினரும் காவல் துறையினரும் இணைந்து நடத்திய அணிவகுப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சாந்தா கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

இந்தப் பேரணியானது திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தின் முன்பு முடிவடைந்தது. இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, ஏராளமான காவல் துறையினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பரப்புரை செல்லும் இடமெல்லாம் அமைச்சர் கண்ணீர்

ABOUT THE AUTHOR

...view details