திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோயிலில் மாபெரும் குடமுழுக்கு வருகிற 7ஆம் தேதி காலை ஒன்பது மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.
இது குறித்து கோயில் ஸ்தாபகர் ரமணி, "ஸ்ரீ ஜகத் குரு பத்ரி சங்கராச்சாரியார், சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
திருவோணமங்கலத்தில் 33 அடி உயர ஆஞ்சநேயர் ஆலயத்தின் மாபெரும் குடமுழுக்கு வருகிற ஏழாம் தேதி நடக்கிறது.அப்போது 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சந்தனமரத்தால் செய்யப்பட்டு ராமஜென்ம பூமியில் வைத்து பூஜைசெய்து கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.