தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல்செய்த அமமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்! - திரூவாரூர் வேட்புமனு தாக்கல்

திரூவாரூர் : திருத்துறைப்பூண்டியில் அமமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல்செய்தார்.

ttp ammk party nomination
ttp ammk party nomination

By

Published : Mar 18, 2021, 3:24 PM IST

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளராக ரஜினிகாந்த் என்கிற அருண்மொழிவர்மன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 18) அவர் திருத்துறைப்பூண்டி பெரியார் சிலை அருகிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக மேளதாளங்களுடன் வட்டாட்சியர் அலுவலகம் சென்றார்.

மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல்

பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர் உள்பட மூன்று நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பூர்த்திசெய்யப்பட்ட வேட்புமனுக்களைத் தேர்தல் நடத்தும் அலுவலரான கீதாவிடம் வழங்கி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: சங்கங்களின் பதிவு குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details