திருவாரூர்: நூறு நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரளம் பேரூராட்சி முன்பு நூறு நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டி விவசாய தொழிலாளர்கள் கஞ்சி கலையத்தை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது நூறு நாள் வேலைத்திட்டம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில் பேரூராட்சிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படாததால் விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் இழந்து ஒருவேலை கஞ்சிக்கு கூட வழியின்றி பசி பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர்.