தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்துறைப்பூண்டியில் புரெவி புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு - புரெவி புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் புரெவி புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

மத்திய குழு ஆய்வு
மத்திய குழு ஆய்வு

By

Published : Dec 30, 2020, 8:29 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் புரெவி புயல், பருவ மழை வெள்ளத்தால் 96 ஆயிரத்து 191 ஹெக்டேர் பயிர்கள், 54.94 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான 8 பேர் கொண்ட மத்திய குழுவினர், திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று (டிசம்பர் 30) சென்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி, பாமணி நுணாகாடு, வடசங்கந்தி உப்பூர், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகளிடமும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details