வேளாண் விளைபொருள் விற்பனை மற்றும் வணிக மேம்பாட்டு எளிமைப்படுத்தப்பட்ட சட்டம் 2020.உழவர்களுக்கான விலை உறுதி மற்றும் பண்ணை சேவை ஒப்பந்த சட்டம் 2020-சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
வேளாண் மசோதா: காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சட்ட நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் - Agriculture act
திருவாரூர்: விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை கிடப்பில் போட வலியுறுத்தி மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சட்ட நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டம்
இச்சட்டங்களுக்கு எதிர்க்கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பெரியார் சிலை முன்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சட்ட நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.