தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று (ஆக.17) முதல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர்களை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் ஆர்வத்துடன் மாணவர்களை அழைத்து வந்தனர். பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, தகுந்த இடைவெளியை கடைபிடித்தனர்.
இதையடுத்து, மாணவர்கள் சேர்க்கை முடிந்த பின்னர் உடனடியாக அவர்களுக்குத் தேவையான பள்ளி புத்தகங்கள், புத்தகப்பைகள் ஆகியவை வழங்கப்பட்டன.