தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சி.ஏ.ஏ.க்கு எதிராகப் போராடும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு - Adiyakkamangalam CAA Protest

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடியக்கமங்கலம் சிஏஏ எதிராக கடையடைப்பு போராட்டம் அடியக்கமங்கலம் சிஏஏ போராட்டம் ஆண்டிப்பாளையம் சிஏஏ கடையடைப்பு போராட்டம் Adiyakkamangalam Shop Closong Protest Against CAA Adiyakkamangalam CAA Protest Andipalayam CAA Against Shop Closing Protest
Adiyakkamangalam CAA Protest

By

Published : Mar 13, 2020, 2:08 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரண்டு மாத காலமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அருகேயுள்ள ஆண்டிப்பாளையம் பகுதியில் இஸ்லாமிய அமைப்பினர் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு

இந்நிலையில், இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள் இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மருந்துக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதி முழுவதுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதையும் படிங்க:சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: அனுமதி வழங்கிய நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details