தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி - etv news

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றதால், பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி
போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி

By

Published : Mar 22, 2021, 8:50 AM IST

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை அறிமுகம் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மீஞ்சூர் பகுதிக்கு வருகை புரிந்தார். இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய முறையில் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்யாததால், கே.எஸ்.அழகிரி வருவதற்கு முன்பு காங்கிரஸ்-திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பெரும் கூட்டமே மீஞ்சூர் பஜார் வீதியில் கைகளில் கொடிகளை ஏந்தியிருந்தனர்.

இதனால், மீஞ்சூர் பஜார் வீதி முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், வாகன ஓட்டிகள் சுமார் இரண்டு மணி நேரம் வாகன நெரிசலில் சிக்கித் தவித்து பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். மேலும், பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர், மீஞ்சூர் பகுதிக்கு பிரச்சார வாகனத்தில் வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அப்பகுதியில் வாகன நெரிசலைக் கண்டதும் கட்சித் தொண்டர்களிடம் ஒரு ஓரமாக நின்று வாகனங்களுக்கு வழிவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், கட்சித் தொண்டர்கள் அதற்கு சற்றும் செவி சாய்க்காத நிலையில், கே.எஸ்.அழகிரி அப்படியே வேட்பாளரை அறிமுகம் செய்து பேசத் தொடங்கினார்.

இதையும் படிங்க:இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

ABOUT THE AUTHOR

...view details