காவல் துறையினர் தங்களது உடல் தகுதியை பேணி பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குமான மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்நிகழ்ச்சியினை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துரை தொடங்கிவைத்தார். இம்முகாமில் ஈசிஜி, ரத்தப் பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை உள்ளிட்ட முழு உடல் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.