திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வுக்கூடம், தொழிற்கல்வி வகுப்பு கட்டடம், நூலகம் ஆகியவைகளை 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, வலங்கைமான் ஊத்துக்காடு கிராமத்தில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சிறப்பு அலுவலர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், "பொதுப்பணித் துறை மூலமாக ஆயிரத்து 244 கி.மீ. தூரம் வரை நடைபெறவுள்ள தூர்வாரும் பணிகளில் 910 கிலோ மீட்டர் இதுவரை முடிந்துள்ளது. 100 நாள் திட்டத்தின் மூலம் இதுவரை 80 ஆயிரத்து 124 பேர் பணியாற்றியுள்ளனர். இதில், ஆயிரத்து 599 கி.மீ. தூரம் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 482 குளங்களுக்கு தூர்வார உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை 115 குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளன.