திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பல்வேறு கட்சிகளிலிருந்த உறுப்பினர்கள் அங்கிருந்து பிரிந்துவந்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவாரூரில் வலங்கைமான், குடவாசல் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோரும், கல்லூரி மாணவிகளும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டாலும் அனைத்து மக்களுக்கும் ரேஷன் பொருள்கள் கிடைக்கும் - அமைச்சர் உறுதி - thiruvarur new member joining functin
திருவாரூர் : ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டாலும் அனைத்து மக்களுக்கும் ரேஷன் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "நெல் கொள்முதல் இதுவரை இல்லாத அளவு 32 லட்சத்து 24 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் காரிப்பருவம் தொடங்குவதால் நெல்லுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்யாமல் இருக்கின்றனர். எந்த இடத்திலாவது நெல் கொள்முதல் நிலையம் அவசியமாகத் தேவைப்பட்டால் அந்த இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துக் கொடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, ”பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வேலைக்குச் சென்று விடுவதால் பொருள்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே!” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டாலும் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை சிரமம் இல்லாமல் வாங்கிக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.