திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை ஆயிரத்து பதினான்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நன்னிலம் ஓ.என்.ஜி.சியில் பணியாற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு நபருக்கும், ஆலங்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, மருதவனம் பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, வலங்கைமான் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் உள்ளிட்ட 23 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மன்னார்குடி கிளை சிறையில் தண்டனை பெற்று வரும் சிறைக்கைதிகள் இரண்டு பேருக்கும், சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 60 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.