விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நீதி மோகன் என்பவர், கடந்த 2008-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்து 22-க்கும் மேற்பட்ட பங்குதாரர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டு காலமாக நீதி மோகன், 50 கோடிக்கும் மேலாகப் பணம் பெற்றுக்கொண்டு, நிலங்களை வழங்காமல் இருப்பதாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் தொடர் புகார்கள் கொடுத்து வந்தனர். அதனடிப்படையில், நீதி மோகனை திருவாரூர் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் நீதி மோகனிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான தொடர் விசாரணையில், நீதி மோகன் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பணியாற்றிய கலைச்செல்வன், ரவிச்சந்திரன், சிவசுப்பிரமணியன், நாயகம், முருகன், கபிலன், பாண்டியன் ஆகிய 7 பேரை திருவாரூர் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.