தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் மேற்கூரையைச் சரிசெய்த மூன்று இளைஞர்கள்... மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு! - 3 youngsters died at Thiruvarur

திருவாரூர்: வீட்டின் மேற்கூரையைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

current shock
மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு

By

Published : Dec 12, 2019, 12:04 AM IST

திருவாரூர் மாவட்டம் அண்டகுடி கிராமத்தில் வசித்து வருபவர் கைலாசம். இவரின் மகன்கள் இளையராஜா(27) , இளவரசன்(25) ஆகிய இருவரும் உறவினர் பாரி (35) என்பவரின் உதவியோடு, வீட்டின் கூரையைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

மழைக்காலம் என்பதால் தண்ணீர் மேற்கூரை வழியாக வடியாமல் இருக்க தகரத்தைக் கொண்டு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக வீட்டின் மின்சார வயர் மீது, தகரம் உராய்ந்து மின்சாரம் பாய்ந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்புவதற்கு ஆம்புலன்ஸ் வரக் கால தாமதமானதால், காவல்துறை வாகனத்திலேயே உடலை ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தம்பி மரணத்தில் நீடிக்கும் மர்மம் - அண்ணனிடம் போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details