கரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னைக்கு நிகராக மற்ற மாவட்டங்களிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கிடையில், திருவாரூர் மாவட்டத்தில் 524 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மேலும் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவாரூரில் புதிதாக 22 பேருக்கு கரோனா! - Covid-19 case
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 546ஆக உயர்ந்துள்ளது.
கரோனா
அவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய மருத்துவமனைகளில் அனைவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதன்மூலம் அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 546ஆக உயர்ந்துள்ளது.