திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தமிழர்களின் உணவு பாரம்பரியத்தைப் பறைசாற்றும்விதமாக பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திவந்த உணவு வகைகள், 174 வகையான நெல் வகைகளை மீட்டெடுத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடர் ஆதிரங்கம் நெல் ஜெயராமனுடைய பண்ணையின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நெல் திருவிழா நடத்தப்பட்டுவருவது வழக்கம்.
பாரம்பரியத்தை நினைவுகூரும் 15ஆவது நெல் திருவிழா! - நெல் திருவிழா
திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாதுகாப்புப் பண்ணையின் சார்பில் 15ஆவது தேசிய நெல் திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டிற்கான தேசிய நெல் திருவிழா திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாகத் தொடங்கப்பட்டது. இந்தத் தேசிய நெல் திருவிழாவில் பொதுமக்களின் பார்வைக்காக 174 வகையான நெல் மணிகள் வைக்கப்பட்டு, அனைத்து வகையான நெல்களிலும் என்னென்ன சத்துகள் அடங்கியுள்ளன என்ற தகவலும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், இயற்கை ஆர்வலர்கள், உழவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.