தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புளிய மரத்தில் மோதிய அரசுப்பேருந்து - கர்ப்பிணி உட்பட 15 பேர் படுகாயம்! - திருவாரூர் மாவட்டம்

நன்னிலம் அருகே அரசுப்பேருந்து புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் அதில் பயணித்த 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளிய மரத்தில் மோதிய அரசு பேருந்து- கர்ப்பிணி பெண் உட்பட 15 பேர் படுகாயம்..!
புளிய மரத்தில் மோதிய அரசு பேருந்து- கர்ப்பிணி பெண் உட்பட 15 பேர் படுகாயம்..!

By

Published : Jul 19, 2022, 5:36 PM IST

திருவாரூர்நன்னிலம் அருகே உள்ள மயிலாடுதுறையில் இருந்து அரசுப்பேருந்து திருவாரூர் நோக்கிச்சென்று கொண்டிருந்தபோது, காக்காகொட்டூர் அருகே சென்றபோது எதிரே திருவாரூரில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியுடன் உரசியதில், அரசுப்பேருந்து லாரி மேல் மோதாமல் இருக்க நிலை தடுமாறி அங்குள்ள புளிய மரத்தில் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர்,நடத்துநர், கர்ப்பிணி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

உடனடியாக தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக 108ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அதிரடி மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details