திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் திருவாரூரைச் சேர்ந்த 21 பேர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 38 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர். அவர்களில் 14 பேர் இன்று (ஏப்ரல் 18) குணமடைந்துள்ளனர். அதில், திருவாரூரைச் சேர்ந்தவர்கள் 7 பேர், நாகையைச் சேர்ந்தவர்கள் 7 பேர்.
திருவாரூர், நாகையைச் சேர்ந்த 14 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர் - தமிழ்நாட்டில் கரோனா
திருவாரூர்: கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சைப் பெற்றுவந்த 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் சால்வை அணிவித்து, பழங்கள், காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்த நிகழ்வில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன், மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், குணமடைந்த 14 பேரும் இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:56 பேருக்கு இன்று கரோனா உறுதி