தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வலுக்கும் போராட்டம்: பிரதமருக்கு 10ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பி வைப்பு - 10 thousand postcards

திருவாரூர்:  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிரதமர் மோடிக்கு 10ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பினர்.

aiyf protest

By

Published : Jul 24, 2019, 5:40 PM IST

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டம் முழுவதும் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு 10ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பினர். இதை தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தபால் அட்டைகள்

ABOUT THE AUTHOR

...view details