தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் சென்னையில் வேலை பார்த்துவந்த நபர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு சென்னையிலிருந்து திரும்புபவர்களுக்கு அந்தந்த மாவட்ட எல்லைகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், அதிகளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையிலிருந்து திருவாரூர் திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்,மனைவி, இரண்டு குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளுக்குத் திரும்பிய ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.