திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலிருந்து அதிவேகமாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் இருந்து சட்ட விரோதமாக, 18 சாக்கு மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 2,700 மது பாட்டில்களை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.