தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகளை காப்பாற்றிய இளைஞர்கள்... - Heavy rains in Tenpenbani river basin areas

திருவண்ணாமலை அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகளை இளைஞர்கள் காப்பாற்றினர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 12, 2022, 11:07 AM IST

Updated : Sep 12, 2022, 11:18 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியதை தொடர்ந்து அணையிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாங்கூர், பில்லூர், குச்சிப்பாளையம், அரசமங்கலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாக விளங்கும் மலட்டாறில் இதன் காரணமாக முன்னறிவிப்பின்றி நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகளை காப்பாற்றிய இளைஞர்கள்

இந்நிலையில், நேற்று(செப்.11) மலட்டாற்றில் இரண்டு சிறுமிகள் விபரீதம் அறியாது நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிருக்கு போராடினர்.

இதனை கண்ட உள்ளூர் இளைஞர்கள் சிறுமிகள் இருவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினர். சிறுமிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பல்லியை விழுங்க முயன்ற ராஜ நாகம்...வீடியோ வைரல்

Last Updated : Sep 12, 2022, 11:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details