தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 11, 2020, 5:43 PM IST

ETV Bharat / state

கொலை - கொள்ளை வழக்குகளில் தலைமறைவாக இருந்தவர் கைது

திருவண்ணாமலை: கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இளைஞர் கைது
இளைஞர் கைது

திருவண்ணாமலை காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தாமரைச்செல்வி. 2018ஆம் ஆண்டு நாவரசு, வினோத்குமார், தீபன், அருண்குமார், சந்திரகுமார் மற்றும் சிறுவர்கள் இருவர் என ஏழு பேர் தாமரைச்செல்வியை கேலி செய்தனர். இதைத் தட்டி கேட்ட அவரது மாமனார் ஆறுமுகத்தை ஏழு பேரும் கட்டையால் அடித்துக் கொலை செய்தனர்.

இந்தக் கொலை வழக்கில் தீபன் என்பவரைத் தவிர மற்ற ஆறு பேரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தீபன் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். அதன்பின், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏந்தல் ரயில்வே மேம்பாலம் அருகே வழிப்பறி செய்ய முயன்ற வினோத்குமார், நாவரசு, தினேஷ், தீபன், ஸ்டீபன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போதும் தீபன் தப்பியோடினார்.

இந்நிலையில், தனியார் மோட்டார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்யும் சீனிவாசன் என்பவரிடம் ஜூன் 9ஆம் தேதி தீபன் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவலர்கள் தீபனை கைது செய்தனர்.

தீபன் மீது ஏற்கனவே இருந்த கொலை, கொள்ளை வழக்குகளுடன் வழிப்பறி புகாரையும் இணைத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details