திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கோயில்மேடு பகுதியைச் சேர்ந்தவர், ஏசய்யா. இவரது மகன் ஜானி (32). இவர் சோமாசிபாடியிலுள்ள கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு, கோயில்மேடு பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருண்ணாமலையிலிருந்து வந்த லாரி ஒன்று ஜானியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஜானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.