திருவண்ணாமலை: செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த அமாவாசை மகள் தீபா. பெங்களூரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மதனை காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் கொண்டார். அதன் பின்னர் மதனுடன் பெங்களூரில் வசித்து வந்த தீபாவை அவரது கணவரின் தாயார் அஞ்சலை மற்றும் கணவரின் அக்கா ரேகா தந்தை மாரிமுத்து ஆகியோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரும்படி துன்புறியத்தாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தீபா தனது தாய் தந்தையை காண திடீரென தோக்கவாடியில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் இரண்டு தினங்களாக தனிமையிலே இருந்து வந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த தீபா கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டின் பின்புறம் உள்ள கொய்யா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.