திருவண்ணாமலை:தமிழ் மாதத்தில் முக்கிய மாதமாக விளங்கும் மார்கழி மாதம் இன்று (டிச.16) தொடங்கியது. இந்த மாத தொடக்கத்தில் ஆரணி அடுத்த அம்மாபாளையம், ஒண்ணுபுரம், அத்திமலைப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் விடியற்காலை முதலே பெண்கள் வீட்டு வாசல் முன்பு சாணம் தெளித்து, கோலமிட்டனர்.
பிறந்தது மார்கழி கோலமிட்டு விளக்கேற்றிய பெண்கள் - Devotional news
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பெண்கள் வாசலில் கோலமிட்டும், விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர்.

பிறந்தது மார்கழி.. கோலமிட்டு விளக்கேற்றிய பெண்கள்!
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பெண்கள் வாசலில் கோலமிட்டும், விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர்
தொடர்ந்து பிள்ளையார் பிடித்து வைத்தும், மாட்டு சாணத்தின் மீது பூசணி பூக்களை வைத்தும் சிறப்பித்தனர். மேலும் விளக்குகளை ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் செய்து மார்கழி மாதத்தை உற்சாகமாக பெண்கள் வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல், கிராம எல்லைப் பாளையத்தில் உள்ள கிராம தேவதை கோயிலில் விளக்குகள் வைத்து கிராம தேவதையை வழிபட்டனர்.
இதையும் படிங்க:அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை