திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொங்கரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வினோத் (28), ரேவதி(25) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில், இரண்டு மாத கைக்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் மனைவி ரேவதியின் நடத்தையில் கணவனுக்கு சந்தேகம் எழுந்ததால் இருவருக்குமிடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரேவதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.