தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - பெண் கைது - இளையங்கண்ணி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டறனை கிராமம்

திருவண்ணாமலை: கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக எரிக்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

தண்டராம்பட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு பெண் ஒருவர் கைது!
தண்டராம்பட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு பெண் ஒருவர் கைது!

By

Published : May 18, 2021, 4:05 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த இளையங்கண்ணி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டறனை கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிராமிய காவல் துறை கண்காணிப்பாளர் அண்ணாதுரைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி அண்ணாதுரை உத்தரவின் பேரில் தண்டராம்பட்டு ஆய்வாளர் தனலட்சுமி தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அங்கு ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக எரிக்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அக்கிராமத்தைச் சேர்ந்த செல்வி (47) விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லையா? பயன்படுத்துங்கள் "FindABed" செயலியை..!

ABOUT THE AUTHOR

...view details