திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு மசூதி தெருவைச் சேர்ந்தவர் அப்துல்சமது. இவரது மனைவி ஆசியா பேகம். இவர்களுக்கு திருமணமாகி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், அப்துல்சமத் தனக்கு மாரடைப்பு ஏற்படுவதாக அவரது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை மனைவி, மகன்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.