திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜல்சக்தி அபியான் சின்னத்தின் வடிவில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜல்சக்தி அபியான் சின்ன வடிவில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் நின்று மாபெரும் விழிப்புணர்வு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், நீர் மேலாண்மை பாதுகாப்பு இயக்கம் குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றுகளை நட்டு, நெல்லி, மாம்பழம், மாதுளை, கொய்யா உள்ளிட்ட பல்வேறு விதமான மரக்கன்றுகளை மாணவர்களிடம் வழங்கினார்.
"இயற்கைக்கு புறம்பாக வாழ்ந்து வருகிறோம்" நீர் மேலாண்மை குறித்து ஆட்சியர் கந்தசாமி பேசுகையில், "இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் இயற்கைக்குப் புறம்பாக வாழ்ந்து வருகின்றோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு, காய்கறி, இறைச்சி ஆகியவற்றை தயாரிப்பதற்கு நீர் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. எனவே, நீரை சேமிக்கவில்லை என்றால் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இதனை கருத்தில் கொண்டுதான் மத்திய, மாநில அரசுகள் நீரை பாதுகாக்க வேண்டி பல்வேறு பணிகளை செய்துவருகிறது" என்றார்.