தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தமிழ்நாட்டு வனப்பரப்பை 33 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை’ - அமைச்சர் ராமச்சந்திரன் - அமைச்சர் ராமச்சந்திரன்

தமிழ்நாட்டில் வனப்பரப்பினை 33 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக திருவண்ணாமலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

’தமிழ்நாட்டு வனப் பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை...!’ - அமைச்சர் ராமச்சந்திரன்
’தமிழ்நாட்டு வனப் பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை...!’ - அமைச்சர் ராமச்சந்திரன்

By

Published : Sep 12, 2022, 10:39 PM IST

திருவண்ணாமலை: தென் மாத்தூர், சொரங்குளத்தூர் ஆகியவற்றில் அமைந்துள்ள வன விரிவாக்க மையத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று (செப்.11) மாலை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளரிடம் அவர் கூறியதாவது, ”வனப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து கற்களை வெட்டி கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுத்திட முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 23.7 விழுக்காடு உள்ள வனப்பரப்பினை 33 விழுக்காடாக ஆக்கிட முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ‘பசுமை தமிழ்நாடு’ என்ற இயக்கம் உருவாக்கப்பட்டு இதன் மூலம் 2 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

வனத்துறையால் விவசாயிகளுக்கு என்னென்ன இன்னல்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பது குறித்த ஆய்வு கூட்டம் இதுவரை 17 மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாளை (செப்.12) திருவண்ணாமலை, ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தவுள்ளோம்.

’தமிழ்நாட்டு வனப் பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை...!’ - அமைச்சர் ராமச்சந்திரன்

இதில் விவசாயிகளுக்கு சாலை, குடிநீர், வீடு, மின்சாரம் போன்றவற்றில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் கூறினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட வன அலுவலர் அருண் லால் மற்றும் அரசு அலுவலர்கள் சென்றிருந்தனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகளை காப்பாற்றிய இளைஞர்கள்...

ABOUT THE AUTHOR

...view details