திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் எதிரில் குடிநீர் குழாய்களில் இருந்து அருகில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவருகிறது.
வீணாக சாக்கடையில் கலக்கும் குடிநீர்:கண்டுகொள்ளதா பேரூராரட்சி நிர்வாகம் - Tiruvannamalai
திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் எதிரில் குடிநீர் குழாய்களில் இருந்து வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தால் அப்பகுதிமக்கள் கவலையடைந்துள்ளனர்.
water leakage
இந்நிலையில், அந்த குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாகிவருகிறது. குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீரானது ஆறாகப் பாய்ந்து சாலை அருகில் உள்ள சாக்கடையில் கலக்கிறது.
குடிநீருக்காக பொது மக்கள் ஆங்காங்கே போராட்டமும் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து வரும் நிலையில் வீணாக செல்லும் குடிநீரை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்